சிமெண்டு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பலி
பட்டுக்கோட்டை அருகே சிமெண்டு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
பட்டுக்கோட்டை;
பட்டுக்கோட்டை அருகே சிமெண்டு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
2 வாலிபர்கள்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மகிழங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன் மகன் தினேஷ்(வயது 23). அதே ஊரைச் சேர்ந்த அவருடைய நண்பர் வீரமணி என்கிற தேவமணி(22). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு சொக்கநாதபுரம் கிராமத்தில் நடந்த கலை நிகழ்ச்சியை வேடிக்கை பார்ப்பதற்காக சொந்த ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொக்கநாதபுரத்திற்கு சென்றனர்.
மோட்டார் சைக்கிள் மோதியது
அங்கு கலைநிகழ்ச்சியை பார்த்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக்கொண்டு இருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் அவர்கள் கார்காவயல் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தனர்.
அங்குள்ள அய்யனார் கோவில் அருகில் உள்ள வளைவில் வந்தபோது ரோட்டோரத்தில் இருந்த சிமெண்டு கட்டையில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
பரிதாப சாவு
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தி்ல பலியான இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story