காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி அருகே உள்ள காருக்குறிச்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அகில் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரஸ்வதி (22). இருவரும் கல்லூரியில் படித்தபோது காதலித்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று வீட்டு மாடியில் சரஸ்வதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரஸ்வதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story