கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழா


கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழா
x
தினத்தந்தி 2 April 2022 1:41 AM IST (Updated: 2 April 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழா நடந்தது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழா கல்லூரி முதல்வர் சிவநேசன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட குறைதீர்வு ஆணைய நீதிபதி ஜவகர், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்தும், நுகர்வோருக்கு இருக்க வேண்டிய வழிப்புணர்வு பற்றியும் எடுத்து கூறினார். குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், தாசில்தார் மாயகிருஷ்ணன் ஆகியோர் கருத்துக்களை வழங்கினர். விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். முடிவில் தமிழ் துறைத் தலைவர் சேகர் நன்றி கூறினார்.

Next Story