ரூ.2.73 லட்சம் கேரள லாட்டரி சீட்டுகள் பறிமுதல்; 2 பேர் கைது
புளியரை சோதனை சாவடியில் ரூ.2.73 லட்சம் கேரள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கோட்டை:
புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி மற்றும் போலீசார் புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2.64 லட்சம் மதிப்பிலான கேரள லாட்டரிகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அஞ்சுகிராமம் வேளாளர் தெருவைச் சேர்ந்த கணேசன் (வயது 26) என்பவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருதால், அடிக்கடி கேரளாவுக்கு ஆட்டோவில் சென்று லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து மறைமுகமாக விற்றது தெரியவந்தது.
மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் குற்றாலம் மேலகரத்தை சேர்ந்த இசக்கிராஜா (30) என்பவரிடம் ரூ.9 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story