டயர் வெடித்ததால் திம்பம் மலைப்பாதையில் நகர முடியாமல் நின்ற லாரி; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


டயர் வெடித்ததால் திம்பம் மலைப்பாதையில் நகர முடியாமல் நின்ற லாரி; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 April 2022 3:07 AM IST (Updated: 2 April 2022 3:07 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் நகர முடியாமல் நின்ற லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி
சத்தியமங்கலத்தை அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த மலைப்பாதை உள்ளதால் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.  இந்த நிலையில் கரூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு சிமெண்டு பாரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. திம்பம் மலைப்பாதையின் 11-வது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று மாலை 6 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது லாரியின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரால் லாரியை மேற்கொண்டு இயக்க முடியவில்லை.  இதன்காரணமாக சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து லாரியில் மாற்று டயர் இரவு 8 மணி அளவில் பொருத்தப்பட்டது. இதையடுத்து லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் திம்பம் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

Next Story