பெங்களூரு மின்வாரிய இயக்குனர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
பெங்களூருவில், நடைபாதையில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் அகற்றப்படாமல் இருப்பதால் மின்வாரிய இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில், நடைபாதையில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் அகற்றப்படாமல் இருப்பதால் மின்வாரிய இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிரான்ஸ்பார்மர்களை அகற்ற...
பெங்களூரு நகரில் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் சாக்கடை கால்வாய் மேல் இருக்கும் டிரான்ஸ்பார்மர்களால் பாதசாரிகள் தொந்தரவு அனுபவித்து வருவதாகவும், அந்த டிரான்ஸ்பார்மர்களை வேறு இடத்திற்கு மாற்ற மின்வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
கால அவகாசம்
அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோாட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்றது. அதன்படி, தலைமை நீதிபதி முன்னிலையில் அந்த மனு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, ‘பெங்களூரு நகரில் நடைபாதையில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை அகற்றுவதற்கு ஏற்கனவே 18 மாதங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. இனியும் கால அவகாசம் வழங்க முடியாது. எனவே மின்வாரிய இயக்குனர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கூறி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story