பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்


பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
x
தினத்தந்தி 2 April 2022 3:19 AM IST (Updated: 2 April 2022 3:19 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பொதுப்பணித்துறைக்கு ரூ.6,911 கோடி 

* வார்டுகளின் மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.924 கோடி
* பழைய மண்டலத்தில் வார்டுகளுக்கு தலா ரூ.4 கோடி, புதிய மண்டல வார்டுகளுக்கு தலா ரூ.6 கோடி
* சிறிய சாலைகளை பராமரிக்க ரூ.60 கோடி
* மழைநீர் கால்வாய் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.40 கோடி

திடக்கழிவு மேலாண்மைக்கு...

* குப்பை கழிவுகளை சுத்தம் செய்யவும், அதை எடுத்து செல்லவும் ரூ.600 கோடி
* அறிவியல் பூர்வமாக குப்பை கிடங்குகளை அமைக்க ரூ.100 கோடி
* குப்பை கிடங்குகளை சுற்றியுள்ள கிராமங்களை மேம்படுத்த ரூ.125 கோடி

சமூக நலத்துறை

* இலவச மடிக்கணினி வழங்க ரூ.40 கோடி
* ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்க ரூ.138 கோடி
* மாற்றுத்திறனாளிகளின் நலத்திட்டங்களுக்கு ரூ.31.90 கோடி
* திருநங்கைகளின் மேம்பாட்டிற்கு ரூ.6 கோடி
* சுகாதாரத்துறைக்கு ரூ.285 கோடி ஒதுக்கீடு
* நகர வன பணிகளுக்கு ரூ.32 கோடி
* ஏரிகள் மேம்பாட்டிற்கு ரூ.25 கோடி
* கல்வித்துறைக்கு ரூ.113 கோடி
* தோட்டக்கலை, பூங்காக்கள் பராமரிப்புக்கு ரூ.174 கோடி
* சுயதொழிலை ஊக்குவிக்க 12 ஆயிரம் பெண்களுக்கு இலவசமாக தையல் எந்திரம் வழங்கப்படும்
* புதிதாக 54 ஆயிரம் தெருவிளக்குகள் அமைக்கப்படும்
* புதிதாக 44 இரவு நேர தங்கும் விடுதிகள் நிறுவப்படும்
* பெங்களூரு மாநகராட்சியில் உள்ள அனைத்து சொத்துகளுக்கும் மின்னணு சொத்து விவர மையம் உருவாக்கப்படும்
* 37 நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும்
* புதிதாக 2 மின் மயானங்கள் அமைக்கப்படும்
* திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு 3,600 ‘4 சக்கர மின் கியாஸ் மற்றும் மின் வாகனங்கள்’ கொள்முதல் செய்ய முழுமையான டெண்டர் விடப்படும்
* குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய அமைக்கப்படும். பிடதி மையத்தில் 6 மாத்தில் மின் உற்பத்தி தொடங்கும்.
* புதிதாக 2 குப்பை கிடங்குகள் அமைக்கப்படும்
* துப்புரவு தொழிலாளர்களுக்கு 225 ஓய்வு அறைகள் கட்டப்படும்
* ‘பி' பட்டா சொத்துகளுக்கு ‘ஏ' பட்டா தகுதி வழங்கும் திட்டம் மூலம் ரூ.1,000 கோடி திரட்டப்படும்.

Next Story