இன்று 27-வது மெகா முகாம் 70 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம் மாவட்டத்தில் இன்று நடக்கும் 27-வது மெகா முகாமில் 70 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் இன்று நடக்கும் 27-வது மெகா முகாமில் 70 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட 27 லட்சத்து 56 ஆயிரத்து 178 பேருக்கு முதல் தவணையும், 20 லட்சத்து 69 ஆயிரத்து 726 பேருக்கு இரண்டாம் தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட 91 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 66 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
தற்போது வாரம் ஒரு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 26 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 7 லட்சத்து 47 ஆயிரத்து 794 பேருக்கு முதல் தவணையும், 9 லட்சத்து 73 ஆயிரத்து 369 பேருக்கு இரண்டாம் தவணையும் என மொத்தம் 17 லட்சத்து 21 ஆயிரத்து 163 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
27-வது மெகா முகாம்
இந்தநிலையில், இன்று (சனிக்கிழமை) 27-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக ஊரகப் பகுதியில் 865 மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் 205 என மொத்தம் 1,070 தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 18 ஆயிரத்து 500-க்கு மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். முகாமில் சுமார் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்ற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் எடுத்து வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story