ஆத்தூர் அருகே பரபரப்பு அரசு அனுமதி இல்லாமல் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்


ஆத்தூர் அருகே பரபரப்பு அரசு அனுமதி இல்லாமல் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
x

ஆத்தூர் அருகே அரசு அனுமதி இல்லாமல் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஆத்தூர், 
ஆத்தூர் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
அம்பேத்கர் சிலை
ஆத்தூர் அருகே ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகில் ஏற்கனவே ஒரு பீடம் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த சுமார் 25 பேர், அம்பேத்கர் சிலையை ஒரு துணியில் சுற்றி அந்த பீடத்தில் நிறுவினர். பின்னர் சிலையை திறக்க முயற்சி செய்தனர். தகவல் அறிந்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சிலையை வைத்தவர்களிடம், அரசு அனுமதி இல்லாமல் இங்கு சிலை வைக்க கூடாது என்று கூறினர். உடனே அந்த பகுதி மக்கள் சிலையை சுற்றி அமர்ந்தனர். சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் வி்ரைந்து வந்தார். தாசில்தார் மாணிக்கம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் அதிகரித்தது.
பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், சிலையை அரசு அனுமதி பெற்று திறக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதுவரை சிலையை திறக்க கூடாது என்றும், சிலையை சுற்றி வேலி அமைப்பதுடன், கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ராமநாயக்கன்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story