ஆத்தூர் விடுதியில் மாணவன் தற்கொலை: நீதி விசாரணை நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
ஆத்தூர் விடுதியில் மாணவன் தற்கொலை செய்த விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்,
பெத்தநாயக்கன்பாளையம் செங்காட்டுபுத்தூர் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் தினேஷ், கடந்த 28-ந் தேதி ஆத்தூர் ஆதி திராவிடர் நல விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவரின் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செல்வக்கண்ணன், மாவட்ட செயலாளர் சதாசிவம், மாணவரின் பெற்றோர் ஜெயராஜ், அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story