மத்திய அரசை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்
தேனியில், மத்திய அரசை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி:
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தாலுகா செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயபாண்டி மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுபோல மயிலாடும்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் போஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்ட செயலாளர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். இதில் விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story