ஊட்டி ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் ஆண்டு விழா
ஊட்டி ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் கவர்னர் சதாசிவம் கலந்துகொண்டார்.
ஊட்டி
ஊட்டியில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் ஆண்டு விழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது. விழாவில் கேரள மாநில முன்னாள் கவர்னரும், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியான பி.சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்மா என்ற மலரை வெளியிட்டார். மேலும் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளில் மருந்தாளுனர்களின் பணிகள் சிறப்பாக இருந்தது. உலகில் சிறந்த துறைகளில் ஒன்றான மருந்தாளுனர் துறையை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களை பாராட்டுகிறன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இந்திய தொழில் நுட்ப கழக தலைவர் டாக்டர் சஞ்ஜீவ்குமார், கல்லூரி முதல்வர் டாக்டர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story