பெண்கள் மீதான இணைய குற்றம்- 112 இலவச உதவி எண் அறிமுகம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 2 April 2022 7:18 PM IST (Updated: 2 April 2022 7:18 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான இணைய குற்றங்களை தெரிவிக்க 112 என்ற இலவச உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மும்பை,
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான இணைய குற்றங்களை தெரிவிக்க 112 என்ற இலவச உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தொடங்கி வைத்தார்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான இணைய குற்றங்களை உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கும் வகையில் 112 என்ற இலவச உதவி தொலைபேசி நம்பரை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே  தொடங்கி வைத்தார். 
 பின்னர் அவர் பேசுகையில், “பெண்கள், குழந்தைகள் இணைய குற்றங்களால் பாதிக்கப்படும் போது 112 என்ற நம்பரில் போன் செய்து போலீசாருக்கு தெரிவிக்கலாம். போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். உலக தரத்தில் மராட்டிய போலீஸ் துறையை நவீனமயமாக்கும் பணியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. போலீசாருக்கு நவீன வாகனங்கள், போலீஸ் நிலையத்தை மேம்படுத்துதல், போலீசாருக்கு வீட்டு வசதி போன்றவற்றில் அரசு சாதகமான முடிவை எடுத்து வருகிறது” என்றார். 
மந்திரி பேச்சு
 நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் பேசியதாவது:-
 பாதிக்கப்பட்டவர்கள் 112 உதவி எண்ணை தொடர்பு கொள்ள வசதியாக நவிமும்பை, நாக்பூரில் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்து சம்பந்தப்பட்ட நகர மற்றும் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளுக்கு போன் அழைப்புகள் திருப்பி விடப்பட்டு, உரிய நடவடிக்கை செய்யப்படும். மாநிலத்தில் உள்ள 11 போலீஸ் கமிஷனரகம் மற்றும 34 மாவட்ட போலீஸ் தலைமையங்களில் கட்டுப்பாட்டு அறைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. போலீசார் இணைய குற்றங்களை கையாளும் வகையில் அதிநவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார். 

 


Next Story