பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
ஆரணியில் பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ரகுநாதபுரம் கிராமத்தை சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 படிக்கும் மாணவி கடந்த 28-ந்தேதி பள்ளிக்கு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆரணி நகர போலீசில் கொடுத்துள்ள புகாரில், சாணர்பாளையம் பகுதியை சேர்ந்த விஜய் என்கிற விக்னேஷ் (வயது 21) என்பவர் தனது மகளை ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்றதாக கூறியுள்ளனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நகர போலீசார் மாணவியை கடத்திய விஜயை கைது செய்து ஆரணி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
அதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி, மாணவியை கடத்திய விஜயை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story