திருவாரூரில் 115 தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தம்
ராஜஸ்தானில் பெண் டாக்டர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 115 தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
திருவாரூர்:
ராஜஸ்தானில் பெண் டாக்டர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் 115 தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
தற்கொலை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் அர்ச்சனாசர்மா ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அர்ச்சனாசர்மா மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதனால் மனமுடைந்த அர்ச்சனா சர்மா தற்கொலை செய்து கொண்டார்.
டாக்டர் அர்ச்சனா சர்மா மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும் அவரது மரணத்துக்கு நீதி கேட்டும் நேற்று இந்திய மருத்துவக் கழகம் சார்பில் நாடு முழுவதும் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆா்ப்பாட்டம்
இதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக இந்திய மருத்துவக் கழக திருவாரூர் மாவட்ட கிளை தலைவர் டாக்டர் இளஞ்செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டாக்டர்கள் கார்த்திகேயன், சுந்தர் கோபாலகிருஷ்ணன், ஜெகதீசன், அகோரசிவன் உள்ளிட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது டாக்டர் அர்ச்சனா சர்மா மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்த போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட அர்ச்சனாசர்மா குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். டாக்டர்களை வன்முறையில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
நோயாளிகள் அவதி
மேலும் திருவாரூர் மாவட்டத்திலுள்ள 115 தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூரில் தனியார் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு குறித்து துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டு இருந்தது.
டாக்டர்களின் திடீர் போராட்டத்தின் காரணமாக புறநோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் திரும்பி செல்லக் கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
---
Related Tags :
Next Story