அகல ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்


அகல ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 April 2022 8:41 PM IST (Updated: 2 April 2022 8:41 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகல ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று இந்திய ரெயில்வே வாரிய தலைவரிடம் செல்வராஜ் எம்.பி. மனு அளித்தார்.

கோட்டூர்:
திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி அகல ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று இந்திய ரெயில்வே வாரிய தலைவரிடம் செல்வராஜ் எம்.பி. மனு அளித்தார். 
கோரிக்கை மனு 
புதுடெல்லியில் இந்திய ெரயில்வே வாரிய தலைவர் வி.கே.திருபாதியை, செல்வராஜ் எம்.பி. ே்நரில் சந்்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தார். 
அதில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் கேட் கீப்பர் முழுமையாக நியமிக்கப்படாததால் பகல் நேரத்தில் மட்டுமே ெரயில் இயக்கப்படுகிறது. எனவே நிரந்தர கேட் கீப்பர்களை நியமித்து இரவு நேரத்தில் (சென்னைக்கு) விரைவு ெரயில்களை இயக்க வேண்டும்.
மீட்டர்கேஜ் காலத்தில் காரைக்குடி- திருவாரூர்- சென்னை மார்க்கத்தில் இயங்கிய கம்பன் விரைவு ெரயிலை மீண்டும் தினமும் விரைவு ெரயிலாக இயக்க 
வேண்டும்.
ரெயில்வே மேம்பாலம் 
நிலுவையில் உள்ள தாம்பரம் - செங்கோட்டை மற்றும் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் (வாரத்திற்கு மூன்று முறை) அந்தியோதயா ெரயில் சேவையை உடனடியாக இயக்க வேண்டும். நாகூர் முதல் அஜ்மீர் வரை புதிய ெரயில் சேவை இயக்க வேண்டும்.
நாகப்பட்டினம் முதல் அக்கரப்பேட்டை வரையிலான பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ெரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்.
சேதமடைந்துள்ள நாகூர் - பட்டினச்சேரி இடையே உள்ள ெரயில்வே கீழ்பாலத்தை  சீரமைக்க வேண்டும். 
நாகப்பட்டினம் ெரயில் நிலையம் அருகே உள்ள ெரயில்வே கேட் சரக்கு ெரயிலால் தினமும் 1 முதல் 2 மணிநேரம் வரை மூடப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
விரைந்து முடிக்க வேண்டும் 
திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகல ரெயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தஞ்சை - நாகப்பட்டினம் மார்க்கத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து விரைவு ெரயில்களும் கொரடாச்சேரி மற்றும் கீழ்வேளூர் நிலையங்களிலும், திருவாரூர் - மயிலாடுதுறை மார்க்கத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து விரைவு ெரயில்களும் பேரளம் சந்திப்பில் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


Next Story