நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 April 2022 9:33 PM IST (Updated: 2 April 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக நாமக்கல் பூங்கா சாலையிலும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் பிரதேச அமைப்புகுழு கன்வீனர் வேலுசாமி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் சிவசந்திரன், செங்கோட்டையன், ஜெயமணி, சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story