வேலகவுண்டம்பட்டி அருகே புளியமரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம்


வேலகவுண்டம்பட்டி அருகே புளியமரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 April 2022 9:33 PM IST (Updated: 2 April 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

வேலகவுண்டம்பட்டி அருகே புளியமரத்தில் கார் மோதி 5 பேர் படுகாயம்

பரமத்திவேலூர்:
ஈரோடு மாவட்டம் சித்தோடு மணியகாரர் தோட்ட பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் யோகநாதன் (வயது 35). ஆயில் கடை நடத்தி வருகிறார். இவரும், உறவினர்களான அதே ஊரை சேர்ந்த செல்லம்மாள் (78), ராதாமணி (56), பழனிசாமி (58) ஆகியோரும் ஒரு காரில் சித்தோடு பகுதியில் இருந்து மோகனூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் தினேஷ் (23) என்பவர் காரை ஓட்டி வந்தார். கார் வேலகவுண்டம்பட்டி மாணிக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வலதுபுறமாக ஒரு வழிப்பாதையில் வந்து கொண்டு இருந்தது. 
அப்போது எதிரே தடை செய்யப்பட்ட ஒரு வழிப்பாதையில் அடையாளம் தெரியாத வந்த வாகனத்தின் அதிக ஒளியால் நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த யோகநாதன், செல்லம்மாள், ராதாமணி, பழனிசாமி மற்றும் கார் டிரைவர் தினேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். 
இதைப்பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் 5 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிக ஒளியுடன் எதிரே வந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story