ராசிபுரம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்தவரின் அடையாளம் தெரிந்தது


ராசிபுரம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்தவரின் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 2 April 2022 9:33 PM IST (Updated: 2 April 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்தவரின் அடையாளம் தெரிந்தது

ராசிபுரம்:
ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டி புதூர் ஓனாச்சிகாடு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரது பாழடைந்த கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், ராசிபுரம் தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இருந்து உடலை மீட்டனர். கிணற்றில் பிணமாக கிடந்தவர் டீசர்ட் மற்றும் பேண்ட் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் பேண்டில் வைத்திருந்த மணிபர்சில் ஆதார் அட்டை, செல்போன்கள் ஆகியவை இருந்தன. இதனை கொண்டு புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
போலீசாரின் விசாரணையில் பிணமாக மிதந்தவர் காஞ்சீபுரம் அருகே உள்ள நங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 35) என்பது தெரியவந்தது. அவர் இந்த பகுதியில் ஏதேனும் வேலை செய்து வந்தாரா? எனவும், அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story