தர்மபுரியில் அமமுக நிர்வாகிகள் கூட்டம்


தர்மபுரியில் அமமுக நிர்வாகிகள் கூட்டம்
x
தினத்தந்தி 2 April 2022 10:02 PM IST (Updated: 2 April 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆய்வுக்கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் ஆர்.பாலு, மாவட்ட அவை தலைவர் முத்துசாமி, மாவட்ட இணை செயலாளர் கவுதமி, மாவட்ட துணை செயலாளர்கள் ஏகநாதன், சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பார்த்திபன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் துணை பொதுச் செயலாளருமான செந்தமிழன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கரிகாலன், கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.ஆர்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு ஆய்வு செய்தனர். வார்டுகள் மற்றும் கிளைகளில் கட்சியை பலப்படுத்துவது, கிராமங்கள் தோறும் கட்சி கொடியை ஏற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கணேசன், பாஸ்கர், பெரியசாமி, சாம்ராஜ் பூங்காவனம், கருணாகரன், சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் வேலாயுதம், கோகுல்ராஜ், ராஜா, ராமன், கிருஷ்ணன், மாது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story