கெலமங்கலத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை


கெலமங்கலத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 2 April 2022 10:15 PM IST (Updated: 2 April 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ராயக்கோட்டை:
கெலமங்கலம் வாணியர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 29). கூலித்தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வெங்கடேஷ் கடந்த மாதம் 28-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story