கஞ்சா, குட்கா கடத்திய 5 பேர் கைது
கஞ்சா, குட்கா கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் தெக்காரப்பள்ளியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை சோதனை செய்தபோது 9 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரி ரெயில்வே காலனியை சேர்ந்த பெரியண்ணன் (வயது 31), சூளகிரி அருகே உள்ள கல்லுகுறுக்கி முருகன் (25), அட்டகுறுக்கி ரஞ்சித்குமார் (19), பத்தலப்பள்ளி கோடியூர் சந்தோஷ் (30) என்பது தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார் கஞ்சா, 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடியில் பெங்களூருவில் இருந்து வந்த காரை சோதனை செய்தபோது குட்கா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குட்கா, காரை பறிமுதல் செய்த போலீசார், மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த அனுத்குமார் (25) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story