ஓசூர், தேன்கனிக்கோட்டையில் யுகாதி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
ஓசூர், தேன்கனிக்கோட்டையில் யுகாதி பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடக, ஆந்திர மாநில எல்லைகளில் உள்ள ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று யுகாதி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி தெலுங்கு, கன்னட மக்கள் வீடுகளின் முன்பு, வண்ண, வண்ண கோலமிட்டும், வாசலில் மாவிலை தோரணம் மற்றும் வேப்பிலை கொத்துகளை கட்டி அழகுபடுத்தினர். பின்னர் புத்தாடை அணிந்து, தேங்காய், பழம் மற்றும் உணவு, பலகாரங்களை சாமிக்கு படைத்து வழிபட்டனர். இதையடுத்து, வேப்பம் பூ, வெல்லம் கலந்த கலவையான ஒப்பட்டுவை குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினருடன் பகிர்ந்து உண்டனர். யுகாதி பண்டிகையையொட்டி தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தேவன்தொட்டி சனீஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story