ரூ.231 கோடியில் இரு வழிச்சாலை அமைக்கும் பணி


ரூ.231 கோடியில் இரு வழிச்சாலை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 2 April 2022 10:17 PM IST (Updated: 2 April 2022 10:17 PM IST)
t-max-icont-min-icon

கடலூர்-மடப்பட்டு இடையே ரூ.231 கோடியில் இரு வழிச்சாலை அமைக்கும் பணியை அதிகாரி ஆய்வு செய்தாா்.

திருவெண்ணெய்நல்லூர், 

கடலூர்-மடப்பட்டு இடையே 36½ கி.மீ. தூரத்திற்கு ரூ.231 கோடியே 77 லட்சம் செலவில் இரு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருவாமூரில் மலட்டாறு உயர்மட்ட மேம்பால பணி, பண்ருட்டி புறவழிச்சாலை அமைக்கும் பணியை கண்காணிப்பு பொறியாளர் செல்வதுரை ஆய்வு செய்தார். அப்போது கோட்ட பொறியாளர் சுந்தரி, உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சத்தியா, இளநிலை உதவி பொறியாளர் சங்கரநாராயணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். தற்போது கடலூர்- மடப்பட்டு இடையிலான பயண நேரம் 90 நிமிடமாக உள்ளது. இருவழிச்சாலை பணி முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால் பயண நேரம் 60 நிமிடமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story