பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அகற்றம்


பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அகற்றம்
x
தினத்தந்தி 2 April 2022 10:18 PM IST (Updated: 2 April 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அகற்றம்

கோத்தகிரி

தமிழகத்தில் குட்கா, கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கூக்கல் பகுதியில் இருந்து மசக்கல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு அருகே தொழிலாளர் குடியிருப்புகளை ஒட்டி கஞ்சா  பயிரிடப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

உடனடியாக அங்கு பயிரிடப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை வேருடன் அகற்றி போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த குடியிருப்பில் குடியிருந்து வரும் சந்தேகத்திற்கிடமான 4 வெளிமாநில தொழிலாளர்களிடம் கஞ்சா செடிகளைப் பயிரிட்டது யார்?, விற்பனைக்காக பயிரிடப்பட்டதா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story