வேதாரண்யத்தில், திடீரென கடல் உள்வாங்கியது
வேதாரண்யத்தில் நேற்று திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் நேற்று திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.
கடல் சேறு
வேதாரண்யம் தாலுகாவில் வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரையில் சேறு பரவி கிடந்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டனர்.
பின்னர் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் அலைகள் சீற்றமாக இருந்ததால் சேறு கடலுக்குள் சென்றது. இதை தொடர்ந்து மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்று வந்தனர்.
திடீரென கடல் உள்வாங்கியது
இந்த நிலையில் நேற்று மாலை வேதாரண்யத்தில் திடீரென கடல் உள்வாங்கியது. சுமார் 50 அடி தூரம் கடல்நீர் உள்ளே சென்று இருந்தது. இதுகுறித்து மினவர்கள் கூறுகையில், வேதாரண்யத்தில் வழக்கமாக கடல் உள்வாங்கும். பின்னர் சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு திரும்பி விடும். தற்போது கடல் அதிக தூரம் உள்வாங்கி உள்ளது. மேலும் சேறு அதிக அளவில் வெளிய வந்துள்ளது. தற்போது கடலில் அலை இன்றி ஏரி போல் அமைதியாக உள்ளது என்றனர். வேதாரண்யத்தில் கடல் திடீரென உள்வாங்கியதால் மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story