கடலூர் அருகே 1 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ரூ10 க்கு வாங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்


கடலூர் அருகே 1 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ரூ10 க்கு வாங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 April 2022 10:46 PM IST (Updated: 2 April 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே 1 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ரூ10 க்கு வாங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்


நெல்லிக்குப்பம்

விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வரக்கால்பட்டு கிராமத்தில்  தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால்  ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தொடர்ந்து,  கடலூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முன்னோட்டமாக, வரக்கால்பட்டு கிராமம் பிளாஸ்டிக் இல்லா கிராமமாக மாறுவதற்கு முதற்கட்டமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை  பொதுமக்கள் கொண்டுவந்து வழங்கினால் ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கும் பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். 

மாவட்டம் முழுவதும் தொடரும்

மேலும் அனைவரும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முழுமையாக தவிர்த்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்திய மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும் என கூறி கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், இந்த பணிகள் மாவட்டம் முழுவதும் தொடரும் என்று தெரிவித்தார். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கூழாக்கி, பின்னர் அதை சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட மாற்று பணிக்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் ரஞ்சித் சிங், பவன்குமார் கிரியப்பனவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் தணிகாச்சலம், மகளிர் திட்டம் செந்தில் வடிவு, ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், மகளிர் சுயஉதவி குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story