தஞ்சையில் இருந்து அய்யம்பேட்டை வழியாக கபிஸ்தலத்துக்கு நகர பஸ்கள் இயக்கக்கோரி சாலை மறியல்


தஞ்சையில் இருந்து அய்யம்பேட்டை வழியாக கபிஸ்தலத்துக்கு நகர பஸ்கள் இயக்கக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 3 April 2022 12:30 AM IST (Updated: 2 April 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் இருந்து அய்யம்பேட்டை வழியாக கபிஸ்தலத்துக்கு நகர பஸ்கள் இயக்கக்கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

கபிஸ்தலம்:-

தஞ்சையில் இருந்து அய்யம்பேட்டை வழியாக கபிஸ்தலத்துக்கு நகர பஸ்கள் இயக்கக்கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. 

நகர பஸ்கள்

தஞ்சையில் இருந்து அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம் வழியாக கபிஸ்தலம் வரை நகர பஸ்கள் இயக்க வேண்டும். கும்பகோணம் முதல் திருவையாறு வரை பள்ளி கல்லூரி நேரங்களில் பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும். பஸ் எண்.15-ஐ கபிஸ்தலம் வரை தொடர்ச்சியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கும்பகோணம் முதல் அண்டகுடி, உமையாள்புரம் வழியாக பாபநாசம் வரை நகர பஸ் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கண்ணையன் தலைமை தாங்கினார். 
மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்லதுரை, அகில இந்திய மாணவர் கழக மாவட்ட செயலாளர் செங்கதிர், அகில இந்திய இளைஞர் கழக மாவட்ட செயலாளர் செந்தமிழ்ச்செல்வன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் விஜயாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிரபு, ராஜேந்திரன் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் உடனடியாக  கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, போக்குவரத்துக்கழக துணை மேலாளர் கணேசன், கோட்ட மேலாளர் செந்தில்குமார், கிளை மேலாளர்கள் ராஜசேகர், அஜய், வெங்கடேசன், ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

Next Story