லாரி வேன் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி
குடிமங்கலம் அருகே லாரி-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
குடிமங்கலம்
குடிமங்கலம் அருகே லாரி-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
லாரி-வேன் மோதல்
திருச்சியில் இருந்து கேரள மாநிலத்திற்கு சிமெண்டு பாரம் ஏற்றிய லாரி ஒன்று மாநில நெடுஞ்சாலையில் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை கேரளாவைச் சேர்ந்த பசீர்ஹரி என்பவரது மகன் ஜிர்ஷாத்பஷீர் (வயது 37) ஓட்டி வந்தார்.
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த வேனும் சிமெண்டு பாரம் ஏற்றிய லாரியும் குடிமங்கலம் அருகே வேலப்ப நாயக்கனூர் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.
2 பேர் பலி
இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த ஒட்டன்சத்திரம் பெருமாள்கவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்த சீரங்கசாமி என்பவரது மகன் ராமகிருஷ்ணன் (வயது 26), வேன் கிளீனரான கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் (41) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த குடிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story