வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது


வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது
x
தினத்தந்தி 2 April 2022 11:08 PM IST (Updated: 2 April 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி அருகே உள்ள குரங்கணி, இரண்டாம் பண்ணைவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்னுலிங்கம் மனைவி மாரியம்மாள் (வயது 55). சம்பவத்தன்று இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், பீரோவில் இருந்த சுமார் 2 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் அரை பவுன் கம்மல் ஆகியவற்றை திருடி சென்று விட்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சேதுக்குவாய்த்தான் பகுதியை சேர்ந்த விஜயராஜ் மகன் சந்தியாமுகேஷ் என்ற சதீஷ் (22), மாரியம்மாளின் வீட்டில் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தியாமுகேசை கைது செய்து, அவரிடம் இருந்து 2½ பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

Next Story