குடும்ப அட்டைதாரர்களுக்கான குறை தீர்வு கூட்டம்
மயிலாடுதுறை நகரப்பகுதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கடைகள் மற்றும் பிற பொது வினியோக ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் குறை தீர்வு கூட்டம்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை ராஜகுமார் எம்.எல்.ஏ. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மயிலாடுதுறை நகரப்பகுதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கடைகள் மற்றும் பிற பொது வினியோக ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை களைவதற்கு மக்கள் குறை தீர்வு கூட்டம் நாளை(திங்கட்கிழமை) மாலை 3.30 மணியளவில் மயிலாடுதுறை வாசவி திருமண மண்டபத்தில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு தொடர்பில்லாத அட்டைதாரர்களை தொடர்புடைய கடைகளுக்கு பிரிப்பதற்கும், குறிப்பாக வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டியது குறித்தும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. அதோடு சாலையில், நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை இடம் மாற்றி அமைப்பது குறித்தும், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அனைத்து கடை நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாவட்ட பதிவாளர் பொது வினியோக திட்டம், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணை பதிவாளர், சரக கூட்டுறவு பதிவு சங்கங்களின் துணை பதிவாளர், வட்ட வழங்கல் அலுவலர், நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர். எனவே, குடும்ப அட்டைதாரர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து தகுந்த விவரங்களுடன் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story