போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 April 2022 11:29 PM IST (Updated: 2 April 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொன்னமராவதி:
பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு அப்பாவி பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவதாக கூறி பொன்னமராவதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் உறுதி அளித்த பின்னர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story