கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க நுங்கு தர்பூசணி வாங்குவதில் மக்கள் ஆர்வம்
கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் பனை நுங்கு, தர்பூசணி வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அவினாசி
கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் பனை நுங்கு, தர்பூசணி வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கோடை வெப்பம்
கோடை வெப்பம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மிக அவசிய தேவைக்கு மட்டுமே பகல் நேரத்தில் பொது மக்கள் வெளியே வருகின்றனர். சாதாரணமாக மக்கள் அடிக்கடி டீ, காபி ஆகிய பானங்களை விரும்பி சாப்பிடுவது வழக்கம். கோடைகாலம் என்பதால் மக்களிடையே டீ, காபி சாப்பிடுவது குறைந்து இளநீர், மோர், கரும்புச்சாறு, பனை நுங்கு, தர்பூசணி பழம், கம்மங்கூழ் ஆகியவற்றை தேடி செல்கின்றனர்.
இதனால் அவினாசி நகரில் பனை நுங்கு, தர்பூசணி பழம் ஆகியவை விற்பனை சூடுபிடித்துள்ளது.
நுங்கு விற்பனை
இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், தர்பூசணி பழம், நுங்கு போன்றவைகள் வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. வருடத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கிடைக்கும். அது தற்போதுள்ள வெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடலுக்கு குளிர்ச்சி தருவதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதால் சீசன் உள்ளவரை பலரும் ஆவலுடன் நுங்கு சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்றனர்.
Related Tags :
Next Story