திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி திடீர் நிறுத்தம்; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருவட்டார்,
திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
படகு சவாரி நிறுத்தம்
திற்பரப்பு அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் தடுப்பணை பகுதிக்கு சென்று உற்சாக படகு சவாரி செய்வார்கள். அங்கு அரைமணி நேர துடுப்பு மற்றும் பெடல் படகு மூலம் இயற்கையை ரசித்த திருப்தி சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கும்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் முதல் திடீரென படகு சவாரி நிறுத்தப்பட்டது.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். படகு சவாரிக்கான குத்தகை முறை முடிந்து விட்டதால் படகை இயக்கவில்லை என கூறப்பட்டது. அதாவது தடுப்பணையில் கடையால் பேரூராட்சிக்கு சொந்தமான படகுகள் குத்தகைதாரர் மூலமாக இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் குத்தகைகாலம் முடிந்ததையொட்டி, குத்தகையை நீட்டிக்க கூடுதல் தொகை செலுத்த பேரூராட்சி நிர்வாகம் கேட்டு கொண்டதாக தெரிகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனாவால் நஷ்டம் ஏற்பட்டதால் கூடுதல் தொகை செலுத்த முடியாது என குத்தகைதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உடன்பாடு ஏற்படாததால் படகு சவாரி இயக்கப்படவில்லை.
அதே சமயத்தில் இனி பேரூராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டு அதன் பிறகு தான் படகுகள் இயக்குவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.
Related Tags :
Next Story