உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
உளுந்தூர்பேட்டை துணைமின் நிலையத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை துணைமின் நிலையத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மின்தடை ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
தொடர்ந்து மின்சார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் துணை மின்நிலையத்தில் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். அதன்பிறகு 8 மணிக்கு மீண்டும் மின்வினியோகம் வழங்கப்பட்டது. இருப்பினும் குறைந்த மின்அழுத்தம் வழக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட மின்தடையால் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story