நாகர்கோவிலில் காண்டிராக்டரை வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது


நாகர்கோவிலில் காண்டிராக்டரை வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

நாகர்கோவிலில் காண்டிராக்டரை வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் காண்டிராக்டரை வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளவிளையை சேர்ந்தவர் ஜோசப் மைக்கேல்ராஜ் (வயது 58), காண்டிராக்டர். இவர் பங்கு பேரவை துணைத் தலைவராக உள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜோசப் மைக்கேல்ராஜை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஜோசப் மைக்கேல்ராஜை வெட்டியது 8 பேர் கொண்ட கும்பல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த அம்புரோஸ், கொற்றிகோடு பகுதியைச் சேர்ந்த ஜோகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அம்புரோஸ் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சி 18-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் ஆவார்.
இதற்கிடையே இந்த வழக்கில் நாகர்கோவில் கட்டையன்விளையைச் சேர்ந்த நிஷாந்த் (22) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.

Next Story