உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
15 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே வாணவரெட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த துளசிராமன் என்பவர் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவிகளுக்கு் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உதவிதலைமை ஆசிரியர் துளசிராமனை கைது செய்தார். இந்த நிலையில் உதவி தலைமை ஆசிரியர் துளசிராமனை பணியிடை நீக்கம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story