காய்கறி சாறில் இயற்கை ஓவியங்கள் வரைந்து அரசு பள்ளி மாணவர்கள் சாதனை


காய்கறி சாறில் இயற்கை ஓவியங்கள் வரைந்து அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 3 April 2022 12:24 AM IST (Updated: 3 April 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

காய்கறி சாறில் இயற்கை ஓவியங்கள் வரைந்து அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

பரமக்குடி
பரமக்குடி அருகே உள்ளது கள்ளிக்குடி கிராமம். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் 27 மாணவர்கள் பனை ஓலைகளில் பீட்ரூட், மல்லி, கீரை, மஞ்சள் உள்பட பலவகையான பச்சை காய்கறிகளில் இருந்து சாறு எடுத்து அதன் மூலம் ஓவியங்கள் வரைந்தனர். அதில் சிவகங்கை அரண்மனை மற்றும் மரங்கள், வீடுகள், குளங்களில் பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்தனர். 2700 நொடிகளில் சிவகங்கை அரண்மனையை அவர்கள் வரைந்தது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளி மாணவர்களின் இந்த சாதனை நோபல் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளது. இதையடுத்து அந்த சாதனை மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கள்ளிக்குடி கிராமத்தை  சேர்ந்த தம்பதிகள் ராஜசேகரன்-திவ்யா செய்திருந்தனர். தற்போது இவர்கள் கர்நாடக மாநிலத்தில் வசித்து வருகின்றனர். சொந்த ஊரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களை சாதனை பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்துள்ளனர். இவர்களின் இந்த செயலையும் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ள அரசு பள்ளி மாணவர்களையும் சமூக ஆர்வலர்களும், கிராம மக்களும் பாராட்டினர்.

Next Story