கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 3 April 2022 12:26 AM IST (Updated: 3 April 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்தவர் 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.

ஜோலார்பேட்டை 
கிணற்றில் தவறி விழுந்தவர் 3 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.

ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் மாக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 42), கூலி தொழிலாளி. இவருக்கு  புஷ்பா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
 
கடந்த 31-ந் தேதி மாலை 6 மணியளவில் விவசாய கிணறு அருகே சக்கரவர்த்தி நடந்து சென்றுபோது திடீரென தவறி கிணற்றில் விழுந்தார். இதையறியாத உறவினர்கள்  பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை விவசாய கிணற்றில் ஒருவர் பிணமாக மிதந்ததை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்

அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story