காவல்துறை சார்பில் தண்ணீர் பந்தல்


காவல்துறை சார்பில் தண்ணீர் பந்தல்
x
தினத்தந்தி 3 April 2022 12:28 AM IST (Updated: 3 April 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் நகரில் காவல்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

குடியாத்தம்

காவல்துறை சார்பில் பொதுமக்கள் பயன்படும் வகையில் கோடை வெயிலை சமாளிக்கும் பொருட்டு தண்ணீர் பந்தல் அமைக்குமாறு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார். 

அதன்பேரில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே குடியாத்தம் போக்குவரத்து காவல்துறை மற்றும் குடியாத்தம் நகர காவல்துறை இணைந்து தண்ணீர் பந்தல் அமைத்துள்ளது.

இந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், வீரப்பன், ஏட்டு செல்லபாண்டியன் உள்ளிட்ட காவல்துறையினர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி கலந்துகொண்டு தண்ணீர்பந்தலை தொடங்கி வைத்தார் மேலும் பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் பழங்கள் வழங்கினார்.

Next Story