வீடு எரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாங்குடி எம்.எல்.ஏ. ஆறுதல்


வீடு எரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாங்குடி எம்.எல்.ஏ. ஆறுதல்
x
தினத்தந்தி 3 April 2022 12:28 AM IST (Updated: 3 April 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

வீடு எரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாங்குடி எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்

தேவகோட்டை,
தேவகோட்டை தாலுகா கண்ணங்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த நாச்சியாபுரத்தில் பூட்டிய வீட்டில் நகை , பணத்தை கொள்ளையடித்துவிட்டு வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் நடந்தது. இதுகுறித்து அறிந்த காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன், தனது சொந்தப் பணத்தில் இருந்து நிதி உதவி வழங்கினார். பின்னர் அவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களையும் வழங்கினார். அதன்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துப் பேசி, துரித நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பூபாலசிங்கம், வட்டார துணைத்தலைவர் முத்து மனோகரன், இளங்குடி முத்துக்குமார், ஆனந்தாஸ் வீரமணி, கணேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story