காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வெள்ளியணை,
காசநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளியணையில் நடைபெற்றது. இதற்கு வெள்ளியணை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆன்டோ ஏஞ்சலின் தலைமை தாங்கினார். வட்டார காசநோய் சிகிச்சையாளர் சாரதா முன்னிலை வகித்தார். இதில் வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு காசநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டு சென்றனர். ஊர்வலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி கடைவீதி மற்றும் முக்கிய தெருக்கள் வழியாக சென்று பின் பஸ் நிறுத்தம் அருகே நிறைவடைந்தது. பின்னர் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காசநோயின் அறிகுறிகள் அதிலிருந்து மீண்டு வர எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள், அதற்கு அரசு மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணன், நவீன்ராஜ், மக்களை தேடி மருத்துவ திட்ட செவிலியர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story