தென்மாவட்ட ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம்
தென்மாவட்ட ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால், பல்வேறு ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
தென்மாவட்ட ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால், பல்வேறு ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேகம் அதிகரிப்பு
தென்னக ரெயில்வே சார்பில் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, ரெயில்கள் வந்து செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 22627) இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும். மணப்பாறையில் 7.46 மணிக்கும், திண்டுக்கல்லில் 8.25 மணிக்கும், மதுரையில் 9.20 மணிக்கும், விருதுநகரில் 10.10 மணிக்கும், சாத்தூரில் 10.30 மணிக்கும், கோவில்பட்டியில் 10.50 மணிக்கும் புறப்படும்.
தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை வாரம் 3 முறை இயக்கப்படும் ரெயில் (வ.எண்.22657), வருகிற 11-ந் தேதி முதல் வள்ளியூரில் இருந்து 6 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு காலை 7 மணிக்கு சென்றடையும்.
சென்னையில் இருந்து மதுரை வழியாக கொல்லம் வரை இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16723) வருகிற 14-ந் தேதி முதல் நெல்லையில் இருந்து கொல்லம் வரை 45 நிமிடம் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லையில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு காலை 9 மணிக்கும், கொல்லம் ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.10 மணிக்கும் சென்றடையும்.
குருவாயூர் ரெயில்
குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை வரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வ.எண்.16128) வருகிற 14-ந் தேதி முதல் குருவாயூரில் இருந்து நாங்குநேரி வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரெயில் குருவாயூரில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும். நாகர்கோவிலுக்கு காலை 7.55மணிக்கும், நாங்குநேரிக்கு காலை 8.45மணிக்கும் வந்து சேரும்.
சென்னையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12667) வருகிற 14-ந் தேதி முதல் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு 25 நிமிடம் முன்னதாக காலை 7 மணிக்கு சென்றடையும். பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (வ.எண்.17235) நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு காலை 7.40 மணிக்கு சென்றடையும்.
அம்ரிதா எக்ஸ்பிரஸ்
நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக கோவை வரை இயக்கப்படும் பகல்நேர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16321) வருகிற 14-ந் தேதி முதல் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும். நெல்லைக்கு காலை 8.45 மணிக்கு வந்தடையும். திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16343) 14-ந் தேதி முதல் பொள்ளாச்சியில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும். மும்பையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் மும்பை எக்ஸ்பிரஸ் (வ.எண்.16351) வருகிற 15-ந் தேதி முதல் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு காலை 7 மணிக்கு சென்றடையும்.
Related Tags :
Next Story