ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பறிமுதல்


ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பறிமுதல்
x
தினத்தந்தி 3 April 2022 12:40 AM IST (Updated: 3 April 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வியாபாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவெறும்பூர், ஏப்.3-
திருச்சி அருகே தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வியாபாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகுமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தீவிரமாக கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருச்சி அருகே திருவெறும்பூர் காட்டூர் பிரியங்கா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து குட்கா, ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் வியாபாரம் செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
800 கிலோ குட்கா பறிமுதல்
அதன் பேரில் திருவெறும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படையினர் விரைந்து சென்று குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்து, அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 800 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்து கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
அவற்றை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த அரியமங்கலத்தை சேர்ந்த பழனிகுமார், திருச்சி மரக்கடையை சேர்ந்த உதயகுமார், துவாக்குடியை சேர்ந்த இஸ்மாயில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் குட்கா, புகையிலை பொருட்களை பல இடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்தி வந்த சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story