டீக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
கடன் தொல்லையால் டீக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நொய்யல்,
திருக்காடுதுறை அருகே உள்ள கந்தம்பாளையம் நாச்சிமுத்து தெருவை சேர்ந்தவர் வெங்கட்குமார் (வயது 36). டீக்கடை உரிமையாளரான இவர் கடன்தொல்லையால் அவதியடைந்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கட்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story