456 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார்
சித்திரை திருவிழாவையொட்டி 456 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது பக்தர்கள் மீது ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அழகர்கோவில்,
சித்திரை திருவிழாவையொட்டி 456 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது பக்தர்கள் மீது ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சித்திரை திருவிழா
சித்திரை திருவிழா என்றாேல மண் மணக்கும் மதுரை தான். சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், தேரோட்டமும் பிரசித்தம். அதிலும் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் உலக பிரசித்தி பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து ெகாள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான அழகர் கோவில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் குறித்து மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் துணை ஆணையர் அனிதா நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவானது வருகிற 14-ந்தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வருகிற 16-ந்தேதி அதிகாலையில் நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் திருவிழா நிகழ்வுகள் வழக்கம் போல் நடைபெறும்.
456 மண்டகப்படிகளில்..
2 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் கோவிலை விட்டு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநெடுகிலும் வண்டியூர் வரை உள்ள 456 மண்டகப்படிகளில் எழுந்தருளுகிறார். மேலும் புதிதாக 8 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருள அனுமதி கேட்டுள்ளனர். அது பரிசீலனையில் உள்ளது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக அழகர் வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சும் போது தோலினால் ஆன தண்ணீர்ப் பை மூலமாக மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும்.
செயற்கை காற்று பம்பு மூலமாகவோ, ரசாயன பொடிகள் கலந்தோ கண்டிப்பாக சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சக்கூடாது. அதை மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 2 ஆண்டுகளுக்கு பின்னர் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடு
எனவே போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. 20-ந்தேதி கள்ளழகர், அழகர் மலைக்கு சென்று கோவிலில் இருப்பிடம் சேருகின்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story