குறுகலான மலைப்பாதையில் அரசு பஸ்-லாரி மோதல்


குறுகலான மலைப்பாதையில் அரசு பஸ்-லாரி மோதல்
x
தினத்தந்தி 3 April 2022 1:08 AM IST (Updated: 3 April 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் அருகே குறுகலான மலைப்பாதையில் அரசு பஸ், லாரி மோதிக் கொண்டன. இதில் பஸ்சில் இருந்த 57 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

துறையூர்,ஏப்.3-
துறையூர் அருகே குறுகலான மலைப்பாதையில் அரசு பஸ், லாரி மோதிக் கொண்டன. இதில் பஸ்சில் இருந்த 57 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
அரசு பஸ்
துறையூரில் இருந்து நேற்று பச்சை மலையில் உள்ள பாளையம் கிராமத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ் மீண்டும் அங்கு இருந்து புறப்பட்டு துறையூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை குணசேகரன் என்பவர் ஓட்டி வந்தார். இதனிடையே துறையூரில் இருந்து சாலை பணிக்காக ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பச்சை மலைக்கு சென்றது. அப்போது குறுகலான பாதையில் சென்ற போது எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும், லாரியும் மோதி கொண்டன. தொடர்ந்து அந்த பஸ் அங்குள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இதனால் பஸ்சில் இருந்து 57 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
அடிக்கடி விபத்துகள்
தடுப்பு சுவர் இல்லாமல் இருந்திருந்தால் பள்ளத்தில் விழுந்து பலத்த உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும். சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகின்றன என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கூறும் போது, பலமுறை இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இதுவரை சாலையை அகலப்படுத்த நடவடிக்கை  இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு  பச்சமலை சாலையை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்ற வேண்டும் என்றனர்.

Next Story