சிவகாசி மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா
சிவகாசி மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
சிவகாசி,
சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா இன்று இரவு 9 மணி முதல் 10 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து தினமும் இரவு நேரத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 8-ம் நாள் திருவிழாவாக பொங்கல் திருவிழா வருகிற 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவாக 11-ந் தேதி கயிறு குத்து திருவிழா நடக்கிறது. 10-ம் நாள் விழாவாக 12-ந்தேதி தேர் திருவிழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story