இருக்கன்குடி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
இருக்கன்குடி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
சாத்தூர்,
இருக்கன்குடி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
கோடை பாசனம்
சாத்தூர் அருகே இருக்கன்குடி அணைக்கட்டில் இருந்து பிரதான கால்வாய் வழியாக விளாத்திகுளம் தாலுகா மேலக்கரந்தை, கீழ்நாட்டுக்குறிச்சி, வடமலாபுரம் கண்மாய்களுக்கு கோடை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலக்கரந்தை, கீழ்நாட்டுக்குறிச்சி, வடமலாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கண்மாய்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் வெகுவாக குறைந்து வருகிறது.
இருக்கன்குடி அணைக்கட்டில் 17 அடியாக தண்ணீர் இருப்பு இருக்கும் நிலையில் கோடை பாசனத்திற்கும், குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கவும் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 120 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்பு
மேலும் தொடர்ந்து 8 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மேலக்கரந்தை நீர் பாசன சங்க தலைவர் பாலகிருஷ்ணன், நத்தத்துபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா பாண்டியன், மாசார்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் கவிதா அய்யாதுரை மற்றும் இருக்கன்குடி அணைக்கட்டு உதவி பொறியாளர்கள் சேதுராமலிங்கம், ராமரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story