ரெண்டாடி, கொடைக்கல் பகுதி கிரானைட் குவாரிகளில் கனிமவள அதிகாரிகள் ஆய்வு
ரெண்டாடி, கொடைக்கல் பகுதி கிரானைட் குவாரிகளில் கனிமவள அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சோளிங்கர்
ரெண்டாடி, கொடைக்கல் பகுதி கிரானைட் குவாரிகளில் கனிமவள அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சோளிங்கரை அடுத்த ரெண்டாடியில் தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பில் 40.88 ஏக்கர் பரப்பளவில் கிரானைட் குவாரி உள்ளது. இதேபோல் கொடைக்கல் ஊராட்சியில் 24.30 ஏக்கர் பரப்பளவில் குவாரி இயங்கி வருகிறது. இவற்றில் 45 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு நவீன முறையில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குவாரிகளை தமிழ்நாடு கனிமவள நிறுவன மேலாண்மை இயக்குனர் சுதீஷ் ஜெயின் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது, அவற்றின் தரம், விற்பனை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் சுரங்கம் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து அப்பகுதியை பசுமையாக்க உத்தவிட்டார்.
ஆய்வின்போது ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு கனிம நிறுவன பொது மேலாளர் ஹென்றி ராபர்ட், துணை பொது மேலாளர் சந்தானம், ராணிப்பேட்டை கோட்ட மேலாளர் கதிரவன், சோளிங்கர் தாசில்தார் வெற்றி குமார், ஒப்பந்ததாரர் ரவீந்திரபாபு ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story